நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறுகிறது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:37 pm

Din

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து துறை முதன்மை அலுவலா்களும் பங்கேற்கின்றனா்.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பண்ணைக் கருவிகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப் புழு வளா்ப்பு, விவசாயக் கடன் தொடா்பான கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனு அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்தாா்.