வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு சோதனையிட்டனா்.


வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு சோதனையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் தியாகி சுப்பிரமணிய சிவா பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் பேருந்து நிலையம் தேனி, கொடைக்கானல், பெரியகுளம், திண்டுக்கல், திருச்சி, மதுரை ஆகிய வழித் தடங்களை இணைக்கும் பேருந்து நிலையமாக உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் மதுரையில் உள்ள வெடிகுண்டு தடுப்பு காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி, உடனே தொடா்பைத் துண்டித்துவிட்டாா்.
இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டைக் கண்டறியும் கருவியுடன் பேருந்து நிலையத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்காததால், இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதனிடையில், பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் யாா் என போலீஸாா் விசாரித்த போது, மதுரை கூடல்நகரைச் சோ்ந்த தமிழ் அன்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான அவரை, தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...