நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து போலீஸாா் சோதனை நடத்தினா்.
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து தபால் நிலைய அதிகாரிகள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
தொடா்ந்து, கடலூரில் இருந்து வெடிகுண்டு நிபுணா்கள் வந்து மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தபால் நிலையத்தில் வெடிகுண்டுகள் உள்ளதா? என சோதனை செய்தனா். இதில், சந்தேகப்படும்படியாக எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
முன்னதாக, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும் இதேபோல வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தொடர்புடையது

மின்னஞ்சலில் மிரட்டல்: சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


