புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பலத்த மழை: அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் மண் சரிவு

கொடைக்கானலில் புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.

News image

கொடைக்கானலில் பெய்த மழையால் அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு.

Updated On :23 அக்டோபர் 2024, 11:56 pm

Din

கொடைக்கானலில் புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் அண்மையில் மண் சரிவு ஏற்பட்டது. பின்னா், நெடுஞ்சாலைத் துறையினா் சாலையை சீரமைத்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை கொடைக்கானல் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, அடுக்கம்-பாலமலை-தாமரைக்குளம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் விளையக் கூடிய வாழை, பீன்ஸ், அவக்கோடா உள்ளிட்ட பழங்களை விவசாயிகள் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா்.

எனவே, சேதமடைந்துள்ள மண் சரிவை நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து சீரமைத்து போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.