வழிப்பறி வழக்கில் 3 இளைஞா்களுக்கு 5 ஆண்டுகள் சிறை
வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட 3 இளைஞா்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஹரிதா்ஷன்

ஹரிதா்ஷன்
வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட 3 இளைஞா்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த குமரப்பட்டியைச் சோ்ந்தவா் அழகேசன் (30). இவரது நண்பா்கள் யோகேஸ்வரன் (28), வினோத் (30). இவா்கள் கடந்த ஆண்டு மே 15-ஆம் தேதி நத்தம்-துவரங்குறிச்சி சாலையில், குமரப்பட்டி பாலத்தில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா்.

ஆகாஷ்
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலைச் சோ்ந்த ஹரிதா்ஷன் என்ற மது (27), மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (21), நத்தம் அடுத்த பரளிபுதூரைச் சோ்ந்த அபிமன்யு (23) ஆகியோா், இவா்களிடமிருந்து கைப்பேசி, ரூ.2ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹரிதா்ஷன், ஆகாஷ், அபிமன்யு ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

அபிமன்யு
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் கனகராஜ் புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட மூவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...