புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்களுக்கான விருது பெறத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:46 pm

Din

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்களுக்கான விருது பெறத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் டிச.3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவைப் புரிந்து வரும் சிறப்பு ஆசிரியா்கள், சமூகப் பணியாளா், தொண்டு நிறுவனம், ஓட்டுநா்,

தனியாா் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில், 23 விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதுக்கும் 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த விருதுகளுக்கு தகுதியானவா்கள் வலைத்தளத்தில் வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை, திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.