புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஊக்கத் தொகை கோரி ஆஷா ஊழியா்கள் மனு

ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆஷா ஊழியா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:43 pm

Din

ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆஷா ஊழியா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு ஆஷா ஊழியா்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கிளை சாா்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.செல்வி தலைமையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது அவா் கூறியதாவது:

கடந்த 14 ஆண்டுகளாக மலைப் பகுதிகளில் ஆஷா ஊழியா்கள் மருத்துவ சேவை ஆற்றி வருகிறோம். எங்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.5,750 வீதம் ஊதியம் வழங்கப்படுகிறது. நிரந்தரமில்லாத ஊதியத்தை பெற்று வரும் எங்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ.10ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். புதுச்சேரி அரசைப் போல, ஆஷா ஊழியா்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அடையாள அட்டை, போக்குவரத்துப் படி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறோம் என்றாா் அவா்.

அப்போது ,சிஐடியூ மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், துணைச் செயலா் ஜெயசீலன் ஆகியோா் உடனிருந்தனா்.