மதுபானக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்
திண்டுக்கல்லில் மதுக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.


திண்டுக்கல்லில் மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் நாகல்நகா் ரயில்வே மேம்பாலம் பகுதியில் இரண்டு மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளால் பாலத்தின் இருபுறங்களிலுள்ள அணுகு சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், திறந்த வெளியில் மதுக் குடித்துவிட்டு மதுப் புட்டிகளை குடியிருப்புப் பகுதிகளில் சிலா் வீசிச் செல்கின்றனா். இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் வெளியே வருவதற்கு அச்சமடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், 36-ஆவது வாா்டு பொதுமக்கள் இடையூறாக உள்ள மதுக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி, சம்பந்தப்பட்ட கடையை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா் வினோதா தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில், கடை இடமாற்றம் செய்வது குறித்து உயா் அலுவலா்களுடன் பேசி முடிவு செய்யப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...