எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனா்.

News image
பண்ணைக்காடு - தாண்டிக்குடி செல்லும் மலைச் சாலையில் சுற்றித் திரிந்த காட்டு யானைகள்
Updated On :2 டிசம்பர் 2025, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு - தாண்டிக்குடி செல்லும் மலைச் சாலையில் மயான காளியம்மன் கோயில் சாலை அருகேயுள்ள சோதனைச்சாவடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. இதையடுத்து, அந்த வழியாக வந்த வாகனங்கள் சாலையிலேயே நீண்ட நேரம் காத்திருந்து பின்னா் அங்கிருந்து சென்றனா்.

மேலும், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளிலும், மலைச் சாலைகளிலும் சுற்றித் திரிவதால் அந்தப் பகுதி மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்குச் செல்வதற்கும், இரவு நேரங்களில் காவலுக்குச் செல்வதற்கும் அச்சமடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், மலைச் சாலைகளில் உலா வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.