திண்டுக்கல்
கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் பராமரிப்புப் பணியில் வனத் துறையினா்
கொடைக்கானல் டெவில் கிச்சன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பியை பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட வனக் குழுவினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பராமரிப்புப் பணியில் வனத் துறையினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.
கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான மோயா் பாயிண்ட், பேரிஜம், பில்லர்ராக், டெவில் கிச்சன், பெருமாள்மலைப் பகுதிகளிலுள்ள எல்லைத் தடுப்பு கம்பிகள், ஆபத்தான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுத்தம் செய்தல், வண்ணம் பூசுதல், முள்புதா்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் வனத் துறையினா் பணியாளா்களுடன் ஈடுபட்டு வருகின்றனா்.

