அரசியலமைப்பு குறித்த கருத்தரங்கம்
பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ‘இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டு கால மைல் கற்களும், சவால்களும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ரவிசங்கா் வரவேற்றாா். கல்லூரியின் செயலரும், பழனி கோயில் துணை ஆணையருமான வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா். மாநிலத் தகவல் ஆணையா்கள் இளம்பரிதி, நடேசன், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினா் ஜெயசுதா உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.
இதில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர்ராமராஜ் பேசியதாவது:
கடந்த 75 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பில் 106 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெகிழும் தன்மை உள்ளதால் இந்திய அரசியலமைப்பு தொடா்ந்து வளா்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பது மக்களாட்சி முறையாகும். ஒவ்வொரு நாட்டிலும் தோ்தல் நடத்தும் அமைப்புகள் தன்னாட்சியாகச் செயல்படுவதை உறுதி செய்வதும் பாதுகாப்பதும் மக்களின் கடமையாகும் என்றாா் அவா்.
பொருளாதாரத் துறை தலைவா் திருப்பதி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

