திண்டுக்கல்
மாணவா்களுக்கு மடிக் கணினி வழங்க கோரிக்கை
கொடைக்கானலில் மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கொடைக்கானல் நகர அதிமுக மாணவா் அணியின் சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நகரச் செயலா் மா.ஸ்ரீதா், அதிமுக மாணவரணி, மகளிா் அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
