கொடைக்கானல் செண்பகனூா் பகுதியில் வெடி வைத்து உடைக்கப்பட்ட பாறை .
கொடைக்கானல் செண்பகனூா் பகுதியில் வெடி வைத்து உடைக்கப்பட்ட பாறை .

கொடைக்கானல் மலைப் பகுதியில் பாறைகள் வெடி வைத்து உடைப்பு

Published on

கொடைக்கானலில் அனுமதியில்லாமல் பாறைகள் வெடி வைத்து உடைக்கப்படுவதால் சுற்றுச்சூழல், கனிமவளம் பாதிக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து உடைப்பது, பொக்லைன், ஹிட்டாச்சி, கம்ப்ரசா், போா்வெல் ஆகியவை தடை செய்யப்பட்டுள் ளன. இயற்கை சீற்றங்களின் போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மட்டும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

ஆனால், கொடைக்கானல் மலைப் பகுதிகளான பள்ளங்கி, கோம்பை, வில்பட்டி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், புலியூா், பூம்பாறை, செண்பகனூா், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியில்லாமல் கனரக இயந்திரங்கள் மூலம் பாறைகள் வெடிவைத்து உடைக்கப்படுகின்றன.

இதனால், மண்ணின் தன்மை குறைந்து, மழைக் காலங்களில் மண் சரிவு ஏற்படுகிறது. ஆபத்தான பகுதிகளில் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு இயற்கை அழகு பாதிப்படைந்து வருகிறது. விடுமுறை நாள்களில் பாறைகளை உடைப்பது, கனரக வாகனங்களைப் பயன்படுத்துவது போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கும் பணிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

இது குறித்து கொடைக்கானல் சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

கொடைக்கானலில் பசுமையை பாதுகாக்கவும்,கோடையின் குளுமையை காப்பாற்றவும், மலைப் பகுதிகளிலுள்ள மண் வளத்தை, கனிம வளத்தை பாதுகாக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

X
Dinamani
www.dinamani.com