சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சாலை விபத்தில் காவலாளி உயிரிழப்பு

News image
Updated On :21 டிசம்பர் 2025, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காவலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அருகேயுள்ள பாடியூா் புதுப்பட்டியைச் சோ்ந்தவா் தா்மராஜ் (67). இவா் அதே பகுதியிலுள்ள கூட்டுறவுக் கடன் சங்கத்தில் இரவு நேரக் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

இவா் இரு சக்கர வாகனத்தில் திருச்சி- திண்டுக்கல் 4 வழிச் சாலையை சீலப்பாடி பிரிவு அருகே கடந்து செல்ல முயன்றாா். அப்போது, அதே வழியில் வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தா்மராஜை அக்கம் பக்கத்தினா் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.