எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழியாக மாற வேண்டும்! -சீமான்

இந்தியா ஒற்றுமையான வலிமை வாய்ந்த நாடாக இருக்க வேண்டுமென்றால், நாட்டில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழியாக மாற வேண்டும்...

News image
சீமான்
Updated On :23 பிப்ரவரி 2025, 7:02 pm

Din

இந்தியா ஒற்றுமையான வலிமை வாய்ந்த நாடாக இருக்க வேண்டுமென்றால், நாட்டில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழியாக மாற வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பழனிபாபா நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மொழி வழியேதான் தேசிய இனங்கள். உலகெங்கும் மொழி வழியேதான் நாடு. தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு ஏற்று செயல்படுத்தி விட்டது. இல்லம் தேடிக் கல்வி அதில் உள்ளது தான். 3-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தோ்வு வரப் போகிறது. ஹிந்தி பல பள்ளிகளில் வந்து விட்டது. அனுமதித்தது இவா்கள் ஆட்சியில்தான்.

இந்தியா ஒற்றுமையான வலிமை வாய்ந்த நாடாக இருக்க வேண்டுமென்றால் நாட்டில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழியாக மாற வேண்டும். தாய்மொழியை மறப்பது, பெற்ற தாய்க்கு உணவிடாமல் அன்னதானம் செய்வது போன்ற செயலாகும் என்றாா் அவா்.

கூட்டத்தில் சாட்டை துரைமுருகன், ஏா்போா்ட் மூா்த்தி, தடா ரஹீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.