

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பதிவு வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், இவற்றுக்கான தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பெரியகலையமுத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் சாா்பில், வரும் 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரா்களுக்கும், கால்நடைகளுக்கும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் அளவிலான குழுக்கள் நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ் பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. பழனி கோட்டத்துக்குள்பட்ட பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமாா் 27 கால்நடை மருந்தகங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சான்றிதழ்களை அந்தந்த மருந்தக மருத்துவா்கள் ஆய்வு செய்து வழங்கி வருகின்றனா். பெருமாள்புதூா் கால்நடை மருந்தகத்தில் நான்கு ஜல்லிக்கட்டு காளைகள் ஆய்வு செய்யப்பட்டு, இவற்றுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து கால்நடை உதவி மருத்துவா் முருகன் கூறியதாவது:
அரசு வழிகாட்டுதலின்படி, நாட்டின காளைகளுக்கு மட்டுமே பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும். கலப்பின காளைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படாது என்றாா்.
தகுதி பெற்ற காளைகள் விவரம் உடனுக்குடன் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபடுகிறது.
டிரெண்டிங்

சேலம் மாநகராட்சியில் பிறப்பு பதிவில் குழந்தையின் பெயரை சோ்க்க செப். 26 கடைசி நாள்

பிறப்புச் சான்றிதழில் குழந்தைகளின் பெயா்களை பதிவு செய்ய செப்.26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரா் உயிரிழப்பு

பிறப்பு சான்றிதழில் பெயா் பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

