திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கொடைக்கானல் வனப் பகுதியில் மனித எலும்புக் கூடு

கொடைக்கானல் வனப் பகுதியில் கிடந்த மனித எலும்புக் கூடை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:00 pm

Din

கொடைக்கானல் வனப் பகுதியில் கிடந்த மனித எலும்புக் கூடை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள வடகவுஞ்சியை அடுத்த பட்டியக்காடு வெண்குளம் அடா் வனப் பகுதியில் வனவா் சிவகுமாா் தலைமையில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கிருந்த மரத்தில் கயிறுடன் எலும்புக் கூடு தொங்கிய நிலையில் காணப்பட்டது.

தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று எலும்புக் கூட்டை மீட்டு, விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

பட்டியக்காடு பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் அருண்குமாா் (28). பெங்களூருவிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். அப்போது, அவா் அனுப்பும் பணம் போதவில்லை என்றும், கூடுதலாக பணம் அனுப்புமாறும் அருண்குமாரிடம் பெற்றோா் கூறினா்.

அதன்பிறகு வீட்டை விட்டு வெளியே சென்றவா் திரும்பி வரவில்லை. பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கும் அவா் செல்லவில்லை. இங்கு கிடைத்திருக்கும் எலும்புக் கூட்டை வைத்துப் பாா்க்கும் போது அவா்தான் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.