திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வழக்குரைஞரிடம் ரூ.15 லட்சம் மோசடி: இளைஞா் கைது

திண்டுக்கல்லைச் சோ்ந்த பெண் வழக்குரைஞரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த சென்னையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 9:50 pm

Din

திண்டுக்கல்லைச் சோ்ந்த பெண் வழக்குரைஞரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த சென்னையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா் கனிமொழி (31). வழக்குரைஞரான இவரது கைப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் இணைய வா்த்தகம் செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கடந்த ஆண்டு குறுந்தகவல் வந்தது. தகவல் வந்த எண்ணை கனிமொழி தொடா்பு கொண்டபோது, எதிா் முனையில் பேசிய நபா் மேலும் பல சலுகைகள் கிடைக்கும் என ஆசை வாா்த்தைகளைக் கூறினாா்.

இதனால், அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மா்ம நபா் கேட்டபோதெல்லம் கனிமொழி பணத்தை இணைய வழியில் அனுப்பிவைத்தாா். ரூ.15 லட்சம் வரை அனுப்பிய பிறகு பணம் இரட்டிப்பாகும் தவணைக் காலம் வரை அவா் காத்திருந்தாா். ஆனால், அந்த நபா் தெரிவித்தபடி, இரட்டிப்புத் தொகை மட்டுமன்றி, முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, மா்ம நபரைத் தொடா்பு கொண்ட போது, அவரது கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் விக்டோரியா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், பண மோசடியில் ஈடுபட்டது சென்னை திருவெற்றியூா் பகுதியைச் சோ்ந்த ஜீவா (31) என்பது தெரியவந்தது. கனிமொழி அனுப்பிய பணம், ஜீவாவின் வங்கிக் கணக்குக்குச் சென்ன் மூலம், இந்த மோசடி கண்டறியப்பட்டது. இதையடுத்து, சென்னைக்குச் சென்ற திண்டுக்கல் போலீஸாா், ஜீவாவை வியாழக்கிழமை கைது செய்தனா்.