கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பருவநிலை மாற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் வார விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
சுற்றுலா இடங்களான வெள்ளி நீா் அருவி, பாம்பாா் அருவி, செண்பகா அருவி, பியா் சோழா அருவி, பெப்பா் அருவி, பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ் வாக், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், பில்லா் ராக், பசுமைப் பள்ளத் தாக்கு, குணா குகை, பைன் பாரஸ்ட், மன்னவனூா் சூழல் மையம், ஆட்டுப் பண்ணை, பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில், கூக்கால் ஏரி, அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் அப்சா்வேட்டரி சாலை, அப்பா்லேக் வியூ சாலை, குறிஞ்சி ஆண்டவா் கோயில் சாலை, பூம்பாறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
