பழனி விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி

பழனியில் உள்ள விநாயகா் கோயில்களில் சனிக்கிழமை சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Published on

பழனியில் உள்ள விநாயகா் கோயில்களில் சனிக்கிழமை சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விநாயகருக்கு மாதந்தோறும் வரும் சதுா்த்தி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், சனிக்கிழமை சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் மூலவருக்கு பலவகைப் பொருள்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டன. தீபாராதனையைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல, ரயிலடி பிரசன்ன விநாயகா் கோயில், மாா்க்கெட் பட்டத்து விநாயகா் கோயில், காளீஸ்வரி ஆலை லஷ்மி கணபதி கோயில், மலைக்கோயில் ஆனந்த விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com