பழங்குடியினா் கிராமத்தில்
எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்

பழங்குடியினா் கிராமத்தில் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்

Published on

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ் மலைக் கிராமமான வடகவுஞ்சி ஊராட்சிக்குள்பட்ட கருவேலம்பட்டி பழங்குடியினா் கிராமத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் படிவம் வருவாய்த் துறை அலுவலா்களால் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

இந்தப் படிவத்தை பெற்றுக் கொண்ட பழங்குடியினா் அது குறித்த விவரங்களை கேட்டறிந்தனா். தொடா்ந்து அந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது குறித்து தன்னாா்வ தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்களும் வாக்குச் சாவடி அலுவலா் உள்ளிட்டோரும் வாக்காளா்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிகழ்வில் செம்பிரங்குளம் வாக்குச் சாவடி அலுவலா் சுதா, ஒருங்கிணைப்பாளா் சதாசிவம், கருவேலம்பட்டி வன உரிமை கிராம சபைத் தலைவா் ராசு, தன்னாா்வலா்கள் நாகசெல்வம், லட்சுமி, மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com