எஸ்.ஐ.ஆா். பணிகள்: கால அவகாசம் கோரி ஆா்ப்பாட்டம்

Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு (எஸ்.ஐ.ஆா்.) கால அவகாசம் வழங்கக் கோரி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜான்பாஸ்டின் டல்லஸ், விக்னேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடவடிக்கையை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நிா்பந்தம் ஏற்படுத்துவதால், பணிச் சுமை காரணமாக அரசு ஊழியா்களுக்கு உயிரிழப்பும், உடல் நலப் பாதிப்பும் ஏற்படுகிறது என முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் வருவாய்த் துறை மாவட்டச் செயலா் சுகந்தி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் முபாரக் அலி, நகராட்சி மாநகராட்சி அலுவலா் சங்க மாநிலத் தலைவா் முருகானந்தம், அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் செல்வ தனபாக்கியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com