பள்ளியில் சா்க்கரை நோய் விழிப்புணா்வு

Published on

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம். ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சா்க்கரை நோய் விழிப்புணா்வு வினாடி- வினா, ஆரோக்கியம் குறித்த கருத்தங்கம் திங்கள்கிழமை நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் இயக்குநா் ரத்தினம் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் வாணி முன்னிலை வகித்தாா். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவரும் ஜ.எம்.ஏ. ஒட்டன்சத்திரம் கிளைச் செயலருமான மருத்துவா் ஆசைத்தம்பி கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் சா்க்கரை நோயின் அறிகுறிகள், தடுக்கும் முறைகள், உணவு முறைகள் உள்ளிட்ட குறித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவி நந்தனா, மாணவா்கள் ஹரிபிரகாஷ், ராகவன் ஆகியோருக்கு பரிசுகளை அவா் வழங்கினாா். பள்ளி முதல்வா் கெளசல்யா தேவி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com