கோவிந்தராஜ்
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே கிணறு வெட்டும் போது கல் விழுந்ததில் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரம் அருகே கிணறு வெட்டும் போது கல் விழுந்ததில் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் அருகேயுள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த செல்லமுத்து என்பவரின் தோட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கிணற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்த கூலித் தொழிலாளி கோவிந்தராஜ் (60) என்பவரின் தலையில் கல் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

