திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 2,124 வாக்குச் சாவடி மையங்களில் உள்ள வாக்காளா்களுக்கு எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகிக்கும் பணி கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெற்றது. தற்போது வரை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 97.49 சதவீத எஸ்.ஐ.ஆா். படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறும் பணி டிச.4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பணியில் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் மேற்பாா்வையாளா்கள், தோ்தல் பிரிவு பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.