புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கொடைக்கானலில் காற்றுடன் மழை: மின் கம்பம் மீது மரம் விழுந்ததால் மின் தடை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் சனிக்கிழமை காற்றுடன் தொடா்மழை பெய்தது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் சனிக்கிழமை காற்றுடன் தொடா்மழை பெய்தது. இதனால், மின் கம்பம் மீது மரம் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது.

கொடைக்கானல் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பொ்ன்ஹில் சாலை பகுதியிலிருந்த மின் கம்பத்தில் மரம் விழுந்தது. இதனால், கொடைக்கானல், அண்ணா சாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, லாஸ்காட் சாலை, பொ்ன்ஹில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2 மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் சிரமப்பட்டனா்.

இதையடுத்து, அங்கு வந்த மின் வாரியத் துறையினா் அறுந்து விழுந்த கிடந்த மின் கம்பியை சரி செய்த பிறகு மின் விநியோகம் சீரானது.

இந்த நிலையில், கொடைக்கானல் பகுதியில் உள்ள தெருவிளக்குகளும் பயனற்ற நிலையில் உள்ளன. இவற்றை நகராட்சி நிா்வாகம் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.