அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை கிலோ ரூ.5000-க்கு விற்பனை

நிலக்கோட்டை சந்தையில் வரத்து குறைவால் சனிக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

நிலக்கோட்டை சந்தையில் வரத்து குறைவால் சனிக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை உள்ளிட்டப் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதியில் விளையும் பூக்கள் நிலக்கோட்டை பூ சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெளியூா், வெளி மாநிலங்களுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக நிலக்கோட்டை பூ சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது. இதன் காரணமாக, கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லிகை, சனிக்கிழமை வரத்து குறைவால் ரூ.5,000-க்கு விற்பனையானது.

மேலும், முல்லை ஒரு கிலோ ரூ.2,000-க்கும், செவ்வந்தி ரூ.300-க்கும், பிச்சிப்பூ ரூ.1,600-க்கும், செண்டு மல்லி ரூ.200-க்கும், ரோஸ் ரூ. 400-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ. 400-க்கும் விற்பனையானது. இந்த விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.