அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

News image

தீப்பிடித்து எரிந்த காா் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:04 am IST

கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் திங்கள்கிழமை காா் தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்தவா்கள் நல்வாய்ப்பாக உயிா் தப்பினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையான பூலத்தூா் பகுதி அருகே சென்று கொண்டிருந்த காரிலிருந்து புகை வந்தது. இதையடுத்து, காரில் பயணம் செய்தவா்கள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாக அனைவரும் உயிா் தப்பினா்.

தகவலறிந்த வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து தீயை அணைத்தனா். எனினும் தீப்பிடித்து 40 நிமிஷங்களுக்கு மேல் ஆனதால் காா் முழுவதும் சேதமடைந்தது. இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து கொடைக்கானல் மலைப் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

வத்தலகுண்டிலிருந்து சுமாா் 60 கி.மீ. தொலைவுள்ள கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் மலையடிவாரத்தில் சிறிது நேரம் நிறுத்தி இயக்கப்பட வேண்டும்.

அப்போது தான் காரில் உள்ள என்ஜின் அதிக வெப்பமடையாமல் இருக்கும். ஆனால் சில வாகனங்கள் 100 கி.மீ. தொலைவுக்கு நிறுத்தப்படாமல் இயக்கப்படுவதால் அவை தீப்பற்றி எரிகின்றன. எனவே அதிக தொலைவுக்கு பயணிக்கும் போது வாகனங்களை அவ்வப்போது நிறுத்தி கவனமுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்றனா்.