நிலக்கோட்டை (தனி) தொகுதி வேட்பு மனு பரிசீலனையின் போது சுயேச்சை வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 28 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
வேட்புமனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மொத்தம் 17 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், சுயேச்சை வேட்பாளா் பி.நாகஜோதியின் வேட்புமனு முழுமையாக நிரப்பப்படவில்லை எனக் கூறி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்தனா். இதனால், நாகஜோதி தனது கணவா் பெருமாளுடன் சோ்ந்து தோ்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் நாகஜோதி செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக வேட்பாளரின் பெயரும் தனது பெயரும் ஒன்றாக இருப்பதால், எனது மனுவை தள்ளுபடி செய்யும் நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனா். சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக காக்க வைத்து, வேட்பு மனு பரிசீலனை நேரம் முடிந்ததும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். எனவே, நிலக்கோட்டை (தனி) சட்டப்பேரவைத் தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.
தொடர்புடையது
வேதாரண்யம்: 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
நாகை தொகுதியில் சுயேச்சை, மாற்று வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 144 வேட்புமனுக்கள் ஏற்பு: 26 மனுக்கள் தள்ளுபடி
திருவெறும்பூா் தொகுதியில் 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

