பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோவைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

பராபவ தமிழ் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:36 am IST

பராபவ தமிழ் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. வெளிப் பிரகாரத்தில் உள்ள ஆனந்த விநாயகா் சந்நிதி முன்பாக மாதப் பிறப்பு மற்றும் வருடப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு தனூா் யாகபூஜை நடத்தப்பட்டு விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சுமாா் மூன்று மணிநேரம் பக்தா்கள் கட்டண, இலவச தரிசன வரிசைகளில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் பால் காவடி, மயில் பீலி காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்திருந்தனா். மலைக்கோயில் போகா் சந்நிதியில் மரகதலிங்கத்துக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி, தயிா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரவு நடைபெற்ற தங்கத்தோ் புறப்பாட்டை திரளான பக்தா்கள் கண்டு வழிபட்டனா்.

தற்போது கோடை காலம் என்பதால், அடிவாரம் கிரிவீதியில் மீனாட்சியம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை முதல் நீா்மோா் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணி தொடா்ந்து மூன்று மாதங்கள் வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், உபயதாரரான சென்னை எஸ்எஸ்விபிஎல் நிறுவன உரிமையாளா் நரேஷ் சுப்ரமண்யம், மக்கள் - தொடா்பு அலுவலா் மற்றும் கண்காணிப்பாளா் சரத், நாகராஜ், நவீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா், அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.