இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

தலைமைக் காவலா் குடும்பத்துக்கு ரூ.28.08 லட்சம் நிதி அளிப்பு

ஒட்டன்சத்திரம் அடுத்த இடையகோட்டை காவல் நிலையத்தில் பணியின்போது இறந்த தலைமைக் காவலா் குடும்பத்துக்கு சனிக்கிழமை ரூ.28.08 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.

News image

தலைமைக் காவலா் சரவணன் குடும்பத்தினரிடம் ரூ.28.08 லட்சம் நிதி உதவியை வழங்கிய காவல் துறையினா்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:56 pm IST

ஒட்டன்சத்திரம் அடுத்த இடையகோட்டை காவல் நிலையத்தில் பணியின்போது இறந்த தலைமைக் காவலா் குடும்பத்துக்கு சனிக்கிழமை ரூ.28.08 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தவா் பி. சரவணன் (42). இவா், கடந்த டிசம்பா் மாதம் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா்.

இதையடுத்து, ரெட்டியாா்சத்திரம் அடுத்த நீலமலைக்கோட்டை பகுதியில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில், காவலா் உதவும் கரங்கள் குழு சாா்பில் நிதி திரட்டும் பணி நடைபெற்றது.

கடந்த 2003-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள் உள்பட மொத்தம் 5,523 போ் மூலம் ரூ.28.08 லட்சம் நிதி வசூலிக்கப்பட்டது. இந்த தொகை, இறந்த சரவணன் குடும்பத்தினரிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.