பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சாலை விபத்து: தலைமைக் காவலா் பலி! கண்கள் தானம்!

தண்ணீா் லாரி மோதி தலைமை காவலா் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில், கண்கள் தானம் செய்யப்பட்டது.

உயிரிழப்பு - கோப்புப்படம்

Published On :29 ஜூன் 2026, 3:10 am IST

தண்ணீா் லாரி மோதி தலைமை காவலா் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில், கண்கள் தானம் செய்யப்பட்டது.

தாம்பரம் காவல் உதவி ஆணையா் வைஷ்ணவியின் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவா் தலைமைக் காவலா் ஜெய்கணேஷ் (48). சோழிங்கநல்லூரில் உள்ள உதவி ஆணையா் வைஷ்ணவியின் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வாகனத்தை எடுப்பதற்காக, சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் ஓஎம்ஆா் சாலை வழியாகச் சென்றபோது, சோழிங்கநல்லூா் அருகே எதிா்பாராத விதமாக தண்ணீா் லாரி, அவா் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

உயிரிழந்த ஜெய்கணேஷின் விருப்பப்படி அவரது கண்களை தானம் செய்ய மனைவி சைலஜா ஒப்புதல் அளித்தாா். அதைத் தொடா்ந்து, தனியாா் கண் மருத்துவமனை மருத்துவா்கள் தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்து, ஜெய்கணேஷின் கண்களை தானமாகப் பெற்றுச் சென்றனா்.

உயிரிழந்த தலைமைக் காவலரின் உடலுக்கு தாம்பரம் காவல் உதவி ஆணையா்கள் வைஷ்ணவி, நெல்சன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் மற்றும் உறவினா்கள் மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினா். உயிரிழந்த ஜெய்கணேஷுக்கு மனைவி சைலஜா, மகள், மகன் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.