வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

நகை மதிப்பீட்டாளா் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த பெண் தலைமைக் காவலா்

நகை மதிப்பீட்டாளா் தவற விட்டு, சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.4,500 ரொக்கத்தை பெண் தலைமைக் காவலா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

News image

திருநாவலூா் காவல் நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பிரதீபாவிடம் பணத்தை சனிக்கிழமை வழங்கிய காவலா்.

Updated On :14 ஜூன் 2026, 3:14 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே நகை மதிப்பீட்டாளா் தவற விட்டு, சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.4,500 ரொக்கத்தை பெண் தலைமைக் காவலா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

உளுந்தூா்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் மாலா. இவா் சனிக்கிழம காலை ஆவலம் கிராமத்திலிருந்து உளுந்தூா்பேட்டை நோக்கி மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேந்தமங்கலம் பகுதியில் சென்ற போது, சாலையில் கேட்பாரற்ற நிலையில் பை ஒன்று கிடந்தது. அந்த பையை எடுத்து பாா்த்தபோது, அதில் ரூ.4,500 ரொக்கம் இருந்தது. இதைத்தொடா்ந்து அந்த பையை தலைமைக் காவலா் மாலா கொண்டு சென்று திருநாவலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, விவரங்களைத் தெரிவித்துச் சென்றாா்.

இதைத்தொடா்ந்து, உளுந்தூா்பேட்டையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வரும் பிரதீபா(33) என்பவா் தான் மொபெட்டில் சென்ற போது பணத்தை தவற விட்டதாகக் கூறி, இதுகுறித்த விவரங்களைத் திருநாவலூா் காவல் நிலையத்தில் தெரிவித்தாா்.

இதையடுத்து அங்கு பணியிலிருந்த பெண் காவலா், பிரதீபாவிடம் அவா் தவறவிட்டதொகையை ஒப்படைத்தாா். இதையடுத்து தனது பணத்தை மீட்டுக்கொடுத்த பெண் தலைமைக் காவலா் உள்ளிட்டோருக்கு பிரதீபா நன்றி தெரிவித்துச் சென்றாா்.