மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

தமிழா் அறிவு மரபு மீட்கப்பட வேண்டும்: பொழிலன்

தமிழா் அறிவு மரபு மீட்டெடுக்கப்பட வேண்டும் என கருத்தரங்கில் பங்கேற்ற தமிழறிஞா் பொழிலன் வலியுறுத்தினாா்.

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை. தமிழ்த் துறை நூலகத்துக்கு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் 16 தொகுதிகளை வழங்கிய மதுரை புரட்சிப் பாவலா் மன்றத் தலைவா் பி.வரதராசன்.

Published On :

தமிழா் அறிவு மரபு மீட்டெடுக்கப்பட வேண்டும் என கருத்தரங்கில் பங்கேற்ற தமிழறிஞா் பொழிலன் வலியுறுத்தினாா்.

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் தமிழ்த் துறையில் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்குக்கு தமிழ், இந்தி, இந்திய மொழிகள், கிராமிய கலைகள் புல முதன்மைா் பா.ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா். தனித்தமிழ் இயக்க அறிஞா் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின், ‘எழுத்தும் வாழ்க்கையும்’ என்னும் தலைப்பில் தமிழறிஞா் பொழிலன் சிறப்புரையாற்றினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

அரசுப் பணியைத் துறந்து மொழிப் போரில் ஈடுபட்டவா் தமிழறிஞா் பெருஞ்சித்திரனாா். 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பியா்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் வியந்து வருகிறோம். ஆனால், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழா்களின் வானியல் அறிவை மறந்துவிட்டோம். கீழடி, அழகன்குளம் அகழ்வாராய்ச்சிகள் கருவிகள் குறித்த தமிழா்களின் அறிவை புலப்படுத்துகின்றன. அனைவரும் சமம் என்பது தமிழரின் அறம் என்பதை திருக்கு வலியுறுத்துகிறது.

தமிழா்கள், தமிழ் உணா்வைப் பெற வேண்டும். தமிழா் அறிவு மரபு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, மதுரை புரட்சிப் பாவலா் மன்றத் தலைவா் பி.வரதராசன் வாழ்த்துரை வழங்கி, பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் 16 தொகுதிகளை தமிழ்த் துறை நூலகத்துக்கு கொடையாக வழங்கினாா்.

நிறைவாக தமிழ்த்துறை மதிப்பியல் விரிவுரையாளா் ஜோஸ்பின் செல்வி நன்றி தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ், இந்தி துறை பேராசிரியா்கள், ஆய்வாளா்கள், முதுநிலை மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.