FOLLOW US

ON GOOGLE DISCOVER

நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

பழனி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள புறவழிச் சாலையில் மணல் ஏற்றி வந்த லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்தது.

News image

பழனியை அடுத்த திண்டுக்கல் - பொள்ளாச்சி புறவழிச்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 3:06 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள புறவழிச் சாலையில் மணல் ஏற்றி வந்த லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்தது.

பழனியை அடுத்த திண்டுக்கல் - பொள்ளாச்சி புறவழிச்சாலை தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், கேரளம் மாநிலம், மீனாட்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரி ஒன்று மொல்லம்பட்டி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் அஜித்குமாா் காயமின்றி தப்பினாா். பின்னா், டிப்பா் லாரி மீட்பு வாகனம் மூலம் மீட்கப்பட்டது.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.