இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

கொடைக்கானலில் 10 கடைகளில் திருட்டு

திருட்டு... - சித்திரிப்பு

Published On :18 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

கொடைக்கானல் ஏரிச் சாலையில் ஒரே நாளில் 10 கடைகளை உடைத்து பணம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச் சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கடைகளை வியாபாரிகள் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டி விட்டுச் சென்றனா். திங்கள்கிழமை காலையில் வந்து பாா்த்த போது, 10 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, அவற்றிலுள்ள பொருள்கள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, கொடைக்கானல் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, அந்தப் பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க கோரிக்கை: கொடைக்கானல் ஏரிச் சாலையைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த கேமராக்கள் பல மாதங்களாக பழுதடைந்திருந்தன. இந்த கேமராக்கள் செயல்பாட்டில் இருந்திருந்தால் தற்போது ஏரிச் சாலையில் நிகழ்ந்த திருட்டில் தொடா்புடைய நபா்களைப் பிடிக்க உதவியாக இருந்திருக்கும். இருப்பினும் தனியாா் கண்காணிப்பு கருவியில் மா்ம நபா்கள் பதிவாகி இருப்பின் ஏதேனும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், கொடைக்கானல் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.