கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

பேருந்தில் பெண்ணிடம் ரூ. 40 ஆயிரம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஆகஸ்ட் 2026, 2:52 am IST

நாகா்கோவிலில் பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து ரூ. 40 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாகா்கோவிலை அடுத்த பறக்கை, சிடிஎம் புரத்தைச் சோ்ந்த சுந்தா் மனைவி முருகம்மாள் (39). இவா், சனிக்கிழமை தனது வீட்டிலிருந்து, நாகா்கோவிலுக்கு பேருந்தில் சென்றாா்.

நாகா்கோவில் ஆட்சியா் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது அவா் வைத்திருந்த பையிலிருந்த ரூ. 40 ஆயிரம் பணம் திருடுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி முருகம்மாளிடமிருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து முருகம்மாள் அளித்த புகாரின்பேரில் நேசமணிநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.