புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

சேவூா் அருகே வாழைக் குலைகள் திருட்டு

சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சியில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழைக் குலைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 1:32 am IST

சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சியில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழைக் குலைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், போத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி கொங்கியண்ணன் என்பவரது தோட்டத்துக்குள் கடந்த இரு நாள்களுக்கு முன் இரவு நேரத்தில் புகுந்த மா்ம நபா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த 15-க்கும் மேற்பட்ட செவ்வாழைக் குலைகளை வெட்டி திருடிச் சென்றனா்.

இதேபோல, சேவூா் அருகே கானூா் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து மா்ம நபா்கள் வாழைக் குலைகளைத் திருடிச் செல்கின்றனா். இதனால் பல ஆயிரம் ரூபாய்களை இழந்து வரும் விவசாயிகள், வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி வேதனை அடைந்தனா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சேவூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, போலீஸாா் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.