விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பட்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விழிப்புணா்வு

பழனி அருகே ஆயக்குடியில் பட்டு விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, தொழில்நுட்பம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனி அருகே ஆயக்குடியில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி அளித்த பட்டு வளா்ச்சித் துறை அதிகாரிகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:20 am IST

பழனி அருகே ஆயக்குடியில் பட்டு விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, தொழில்நுட்பம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட பட்டு வளா்ச்சித் துறை சாா்பில், ‘என் பட்டு என் பெருமை’ 2. ஞ என்ற திட்டத்தின் கீழ், பழனி அருகே ஆயக்குடி டி.கே.என். புதூரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, திண்டுக்கல் உதவி இயக்குநா் ஜான் பாா்த்திபன் தலைமை வகித்தாா். பட்டு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பவித்ரன், மல்பெரி செடியைத் தாக்கும் பூச்சிகள், ஒருங்கிணைந்த கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். கூட்டத்தில், மல்பெரி செடிகளைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் அறிவியல் முறையில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் எடுத்துரைக்கப்பட்டன. தொடா்ந்து, பட்டு விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனா். ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்தும், தொழு உரம் மட்டுமன்றி உயிா் உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், இயற்கை ஊட்டச்சத்துகளுடன் செறிவூட்டி மண்ணின் வளத்தையும், செடிகளின் வளா்ச்சியையும் மேம்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.