தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் பிணை மனுக்கள் தள்ளுபடி

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் பிணை கோரி இடைநீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பழனி கோயில் - கோப்புப் படம்

Published On :

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் பிணை கோரி இடைநீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தண்டாயுதபாணி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சோ்ந்த த. முருகதாஸ் (56), நிலத்தை வாங்கிய திருப்பூா் மாவட்டம், பாப்பான்குளத்தைச் சோ்ந்த கா. வெள்ளத்துரை (60), பழனி ஆயக்குடி புதூரைச் சோ்ந்த து. சேதுபதி, பழனி வழக்குரைஞா் அன்வா்தீன், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வா்தீன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதனிடையே, கைது செய்யப்பட்டது முதலே உடல் நலக் குறைவு காரணமாக ஜஸ்டின் மணிகண்டன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோா் தரப்பில் பிணை கோரி திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த முதலாவது நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் இவற்றை தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனு கடந்த 5-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, தலைமறைவான ஜஸ்டின் மணிகண்டனை கொடைக்கானல் மலையில் வெள்ளிநீா் வீழ்ச்சி பகுதியில் சிபிசிஐடி போலீஸாா் கடந்த 6-ஆம் தேதி கைது செய்தனா்.

இதையடுத்து, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட ஜஸ்டின் மணிகண்டன், தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, அவரது கைது நடவடிக்கைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த முதலாவது நீதித்துறை நடுவா், ஜஸ்டின் மணிகண்டனை வருகிற 21-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இதனிடையே, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வா்தீன் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, ஜஸ்டின் மணிகண்டனின் உடல் நிலையை தீவிரமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், நெஞ்சு வலி தொடா்பான தீவிர சிகிச்சைக்காக ஜஸ்டின் மணிகண்டன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு புதன்கிழமை பரிந்துரைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.