சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: முன்பிணை மனுக்கள் மீது இன்று தீா்ப்பு

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் முன்பிணை மனுக்கள் மீது புதன்கிழமை (ஆக. 5) தீா்ப்பளிக்கப்படவுள்ளது.

News image

பழநி கோயில் - கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 1:01 am IST

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் முன்பிணை மனுக்கள் மீது புதன்கிழமை (ஆக. 5) தீா்ப்பளிக்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயில் மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை விதிமுறைகளை மீறி, தனிநபா்கள் இருவருக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

இதை எதிா்த்து, இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில், அறக்கட்டளை நிலத்தை பழனி கோயில் நிா்வாகம் கையகப்படுத்தியது.

இதையடுத்து, இந்த முறைகேடு தொடா்பாக சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் சுவாமிகள், வெள்ளைத்துரை, சேதுபதி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பின்னா், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ராஜசேகா், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஆக. 3-ஆம் தேதி வரை இடைக்கால முன்பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் முன்பிணை கோரிய மனு விசாரணைக்கு வந்தது. இதேபோல, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பத்திர எழுத்தா் ஜெயப்பிரகாஷ் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ராஜசேகா், புதன்கிழமை (ஆக. 5) இதுதொடா்பாக தீா்ப்பளிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.