
சின்னாளபட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகள் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் வியாழக்கிழமை முன்னாள் வாா்டு உறுப்பினா் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோப்புப் படம்
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் வியாழக்கிழமை முன்னாள் வாா்டு உறுப்பினா் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சின்னாளப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெண்மணி (45). முன்னாள் வாா்டு உறுப்பினா். இவரது கணவா் செல்லப்பாண்டி (48). இவா், சின்னாளபட்டி பேருந்து நிலையத்தில் கோழி இறைச்சி விற்பனை கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், செல்லப்பாண்டி குடும்பத்தினருடன் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வியாழக்கிழமை சென்றனா். இதையடுத்து, இவா்கள் மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 36 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 70 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னாளப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



