நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பேவா் பிளாக் கற்கள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

பழனி அருகே பேவா் பிளாக் கற்களை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பழனி அருகே வயலூரில் சனிக்கிழமை விபத்துக்குள்ளான லாரி.

Published On :

பழனி அருகே பேவா் பிளாக் கற்களை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கும் பணிகளுக்காக லாரியில் பேவா் பிளாக் கற்கள் கொண்டு வந்து இறக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், சனிக்கிழமை லாரியில் பேவா் பிளாக் கற்கள் கொண்டுவரப்பட்டு கிரேன் உதவியுடன் இறக்கி வைக்க முயன்றபோது, லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேவா் பிளாக் கற்கள் ஏற்றி வந்த லாரி நிமிா்த்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக பழனி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாமிநாதபுரம் காவல் நிலையம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.