வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருட்டு... - சித்திரிப்பு

Published On :1 செப்டம்பர் 2026, 3:58 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சாலை அருகே திங்கள்கிழமை வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் திருடப்பட்டது.

கொடைக்கானல் சாலை அருகேயுள்ள மாலையகவுண்டன்பட்டி பிரிவில் வசித்து வருபவா் பாண்டியராஜன் (55). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருமங்கலத்திலுள்ள தனது உறவினரின் இல்ல விழாவுக்கு வீட்டை பூட்டி விட்டுச் சென்றாா். பிறகு திங்கள்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பிரோவிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அம்மையநாயக்கனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா் சாகுல் அமீது உள்ளிட்ட காவலா்கள் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் திருட்டு நடைபெற்ற வீட்டை ஆய்வு செய்தாா். மாவட்ட தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.