திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அய்யனாா்நகா்
பகுதியில் கழிவுநீா் வெளியேற வழியில்லாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சுகாதாரச் சீா்கேடுகள் ஏற்படுவதாகவும், கொசுத் தொல்லை அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் அளிக்கப்பட்டது. ஆனாலும், கழிநீா்க் கால்வாயைச் சீரமைப்பதற்கு ஊராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள், வேடசந்தூா் ஒட்டன்சத்திரம் சாலையில் புதன்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக வேடசந்தூா்- ஒட்டன்சத்திரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு சாலை மறியல்

கந்தா்வகோட்டை அருகே இரு தரப்பினருக்கிடையே மோதல்: குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்

ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிமித்து தாா் சாலை: பொதுமக்கள் அதிருப்தி

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


