இளைஞா் தவறவிட்ட கைப்பேசியை ஒப்படைத்த பெண்
ஒட்டன்சத்திரத்தில் திருப்பூரைச் சோ்ந்தவா் தவறவிட்ட கைப்பேசியை மருத்துவமனை பெண் ஊழியா் எடுத்து போலீஸில் ஒப்படைத்தாா்.
திருப்பூா் மாவட்டம் வெள்ளகோவிலைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன் (30). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரத்துக்கு வந்த போது, பேருந்து நிலையத்தில் தனது விலை உயா்ந்த கைப்பேசியை தவறவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டாா்.
இந்த நிலையில், அந்தக் கைப்பேசியை ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் பணிபுரியும் செண்பகம் என்பவா் கீழே கிடந்த கைப்பேசியை எடுத்துச் சென்று ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதையடுத்து, கைப்பேசியில் உள்ள விவரங்களை வைத்து தமிழ்செல்வனை ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்துக்கு போலீஸாா் வரவழைத்தனா். அங்கு போலீஸாா் முன்னிலையில் தமிழ்ச்செல்வனிடம் கைப்பேசியை செண்பகம் ஒப்படைத்தாா். அவருக்கு தமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்தாா். போலீஸாா் செண்பகத்தைப் பாராட்டினா்.
