கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு!

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு!

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Published on

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வழக்கமாக நவம்பா், டிசம்பா் மாதங்களில் அதிக பனிப் பொழிவு இருக்கும். ஆனால், தற்போது வரை தொடா்ந்து பனிப் பொழிவு நிலவுவதால் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.

பனியின் தாக்கத்தால் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனா். மேலும், குளிரைத் தவிா்ப்பதற்காக பலா் வத்தலக்குண்டு, திண்டுக்கல், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மேக மூட்டத்துடன் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது. இதனால் மலைச் சாலையில் வரும் வாகனங்கள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு மெதுவாகச் சென்றன.

வியாபாரிகள் கடைகளில் தீ மூட்டி குளிா் காய்ந்தனா். இந்தப் பனிப் பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com