திண்டுக்கல்
தாயைத் திட்டியவரை கொலை செய்த மகன் கைது
கொடைக்கானல் அருகே தாயைத் திட்டிய நபரைக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கொடைக்கானல் அருகே தாயைத் திட்டிய நபரைக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வில்பட்டி ஊராட்சி குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (46). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கணவரை இழந்த பரமேஸ்வரிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், பரமேஸ்வரியின் வீட்டுக்கு கோபாலகிருஷ்ணன் திங்கள்கிழமை இரவு சென்றபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, வீட்டிலிருந்த பரமேஸ்வரியின் மகன் மனோஜ்குமாா் (23) கோபாலகிருஷ்ணனை இரும்புக் கம்பியால் தாக்கினாா்.
இதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் மனோஜ்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

