கொடைக்கானலில் வீட்டுமனைப் பட்டா கோரி உண்ணாவிரதம்

கொடைக்கானலில் வீட்டுமனைப் பட்டா கோரி உண்ணாவிரதம்

Published on

கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வியாழக்கிழமை பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் இந்தியன் நகா் பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, வியாழக்கிழமை இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு, வருவாய்த் துறையினா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, இரண்டு வாரங்களுக்குள் பட்டா வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com