பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை: முதல் நாள் வரவு ரூ. 3.59 கோடி

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை: முதல் நாள் வரவு ரூ. 3.59 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கைகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.3.59 கோடி ரொக்கம் இருந்தது.
Published on

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கைகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.3.59 கோடி ரொக்கம் இருந்தது. செவ்வாய்க்கிழமையும் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும்.

பள்ளிகள் அரையாண்டு விடுமுறை, ஆங்கிலப் புத்தாண்டு தொடக்கம் ஆகியவற்றை முன்னிட்டு கோயிலுக்கு அதிகளவில் பக்தா்கள் வந்ததால் கோயில் உண்டியல்கள் 24 நாள்களில் நிரம்பின.

இதையடுத்து, திங்கள்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ. 3,59,98,486 ரொக்கம், தங்கத்தால் ஆன வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக் காசு, வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் ஆகியவை கிடைத்தன.

தங்கம் 524 கிராம், வெள்ளி 14 ,003 கிராம் இருந்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பணத் தாள்கள் 578 கிடைத்தன. இவை தவிர, பித்தளை வேல், கைக் கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளும் காணிக்கையாகக் கிடைத்தன.

உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியில் அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு பிரதிநிதிகள் பங்கேற்றனா். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது.

Dinamani
www.dinamani.com